6 பிப்., 2022

அரசியல் சாக்கடை என்றால், அதனை சுத்தம் செய்வது எப்போது ?

நம்மில் சிலர் அரசியல் சாக்கடையாகிவிட்டது எனவே அது எனக்கு வேண்டாம் என்றும், இன்னும் சிலர் தேர்தல் நாளன்று வாக்கு செலுத்துவதையே தவிர்த்தும் வருகின்றனர். இன்னும் பலர் வாக்கு செலுத்த பணம் வாங்கிக்கொண்டு பணம் கொடுத்த வேட்பாளர்களுக்கு மட்டுமே தனது வாக்குகளை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் சாக்கடையாகிவிட்ட தற்போதைய அரசியலை தூய்மைபடுத்தும் எண்ணத்தோடு சொற்ப கட்சிகளே உள்ளன. அத்தகைய கட்சிகளுக்கு நமது ஆதரவை அளிக்காவிட்டால் ஏற்கெனவே சாக்கடையாக உள்ள அரசியல் கலம் மிகவும் மோசமான நிலைக்கு சென்றுவிடும் என்பதை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து அரசியலில் நம்மால் இயன்றவரை ஈடுபத்திக்கொண்டால் சாக்கடையாகியுள்ள அரசியலை தூய்மைபடுத்தலாம்.

நாம் அனைவரும் அரசியலில் ஈடுபடுவது சாத்தியமா?

ஆம். அனைவரும் அரசியலில் ஈடுபடலாம்.அது 100சாத்தியமே.அது எப்படி சாத்தியம் என்று அறிவதற்கு முன்னர் அரசியல் என்பது என்ன என்று நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

அரசியல் என்பது மக்களுக்காக செயல்படும் அரசை நிறுவுவதற்கும், அத்தகைய அரசு சட்டப்படியும், மக்களின் நலனுக்காகவும் செயல்படுவதை உறுதி செய்ய வழிவகுக்கும் ஏற்பாடுகள் ஆகும். அதாவது நாம் அரசியலில் ஈடுபட அரசியல் கட்சியில் உறுப்பினராக வேண்டும் என்றும் கட்சி பதவியில் இருக்க வேண்டும் என்றும் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற அவசியம் இல்லை. மாறாக நல்ல கொள்கையுள்ள, ஊழலற்ற அரசியல் கட்சிகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதும், வாக்குக்கு பணம் வாங்குவதை தவிர்த்து நேர்மையான கட்சிக்கும், வேட்பாளருக்கும் வாக்கு அளிப்பதை உறுதி செய்தல் ஆகியவற்றின் மூலம் நாம் அரசியலில் பங்கேற்கலாம்.

தீவிர அரசியல்

அரசியலில் அடுத்தகட்ட பயணம்தான் தீவிர அரசியல் அதாவது தேர்தல் அரசியல். இதற்குதான் அரசியல் கட்சியில் உறுப்பினர், கட்சியில் பொறுப்பு, தேர்தலில் பங்கேற்பு போன்ற ஜனநாயக பொறுப்புகள் தேவை.

நாம் அனைவரும் தீவிர அரசியலில் ஈடுபடவேண்டிய அவசியம் இல்லை. ஆனாலும் படித்த மற்றும் அரசியல் விழிப்புணர்வுள்ள இளைஞர்கள் , பெரியவர்கள் தீவிர அரசியலில் ஈடுபட்டு சாக்கடை கிடங்குகளாகி வரும் அரசியல் கலத்தை தூய்மைபடுத்த முன்வரவேண்டும் என்பது காலத்தின் கட்டாயமாக உள்ளது.

தீவிர அரசியலில் உள்ளவர்களுக்கு ஏற்படும் தடங்கள்கள்  

சாக்கடையாக உள்ள தற்போதைய அரசியலை தூய்மைபடுத்த ஒரு சில புதிய கட்சிகள் வந்தும், அத்தகைய கட்சிகளில் விழிப்புணர்வுள்ள இளைஞர்கள் பலர் சேர்ந்துள்ள நிலையில் அவர்களும், அவர்கள் சார்ந்துள்ள கட்சிகளும்  நிதி பற்றாக்குறை, ஊடக தீண்டாமை போன்ற பல்வேறு தடைகளை சந்திக்க வேண்டியுள்ளது.

அரசியல் தற்போது சாக்கடையாகியுள்ளதற்கு காரணமான கட்சிகளிடம் தாராளமான நிதி பலம் மற்றும் ஊடக செல்வாக்கு உள்ளதால் ஓட்டுக்கு பணம், பொய்யான செய்திகள் ஆகியவற்றின் மூலம் மக்களை தன்வசபடுத்த பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபடுகின்றன. அத்தகைய கட்சிகளுக்கு நிகராக நேர்மையாக இயங்கும் ஒரு சில புதிய கட்சிகள் நிதி பற்றாக்குறை காரணமாக மக்களை சென்றடையவும், ஊடகங்கள் அக்கட்சிகளை நிராகரிப்பதால் மக்களிடம் உண்மை செய்தியை கொண்டு சேர்க்கவும் முடியாத நிலை உள்ளது.

தீவிர அரசியலுக்கு துணை நிற்க வேண்டும்

நாம் அனைவரும் தீவிர அரசியலில் ஈடுபடுவது சாத்தியமற்ற ஒன்று. ஆனால் நாம் அனைவரும் அரசியல் செய்ய வேண்டும். பொதுமக்களுக்கு நல்ல கட்சிகளையும், நல்ல வேட்பாளர்களையும் அடையாளம் காட்டுதல், விழிப்புணர்வு ஏற்டுத்துதல், நேர்மையான அரசியல்வாதிகளை ஊக்குவித்தல், ஜனநாயக கடமையான நமது வாக்குரிமையை பணத்திற்கு விற்பதை தவிர்த்தல் ஆகியவற்றை செய்தல் நமது தலையாய கடமையாகும்.

மேலும் தீவிர அரசியலில் உள்ளவர்களுக்கு அதாவது நேர்மையாக செயல்படும் தீவிர அரசியல் செய்பவர்களுக்கும், நேர்மையாக செயல்படும் அரசியல் கட்சிக்கும் தம்மால் இயன்ற அளவு நன்கொடை வழங்குதல் மற்றும் வலைதலங்கள் மூலம் தம்மால் இயன்ற அளவுக்கு ஆதரவு தெரிவித்தல் போன்ற செயல்கள் மூலம் ஆதரவளித்து சாக்கடையாக உள்ள அரசியலை தூய்மையாக்கலாம்.  

அரசியல் என்பது சாக்கடை. அதை தவிற்பதே சிறந்தது என்ற எண்ணத்தை நம் மனதிலிருந்து அடியோடு அகற்றி அதனை சுத்தம் செய்வதற்கான நேரம் இதுவே இப்பொழுதே என்பதை உணர்ந்து  நமது மக்களின் வாழ்வியலை தீர்மானிக்கும் மாபெரும் சக்தியான அரசியலை தூய்மைபடுத்தி அன்னைத் தமிழையும், தமிழகத்தையும் பெருமைபடுத்துவோம் வாருங்கள் !!!


அரசியல் என்பது இந்த பூமியில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் ஆற்றும் சேவையாகும் . அதாவது அனைத்து உயிர்களும் இந்த பூமியில் வாழ ஏற்ற சுற்றுச்சூ...